புதுச்சேரி: சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பகுதிகளில் நேற்று (ஜூலை17) காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை 801 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரியில் 51, ஏனம் பகுதியில் 7 பேருக்கு என புதிதாக 58 பேருக்கு கரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுவரை, புதுச்சேரியில் மொத்தம் 1, 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் இதுவரை 1, 066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.