புதுச்சேரி மாநிலம், பீமா நகர் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் சுப்பிரமணியன் 2019 டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு பாதுகாப்புப் பணிக்காக அரியாங்குப்பம் மாதா கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காவலர் சுப்பிரமணியத்தின் மீது மோதியதில், தலையில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் சுயநினைவிழந்த சுப்பிரமணியனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அவரது மனைவி சுமித்ரா, சகோதரர் நேரு ஆகியோர் புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கையில் 'பணியின்போது படுகாயமடைந்த சுப்பிரமணியத்திற்கு இதுவரை ரூ. 15 லட்சம் செலவாகிவுள்ளது. மேலும் பல லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றனர்.