டெல்லி பிரஹலத்பூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் நான்கு வயது சிறுமி தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பாட்டி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக தாயும், மகளையும் அவர் மிரட்டியுள்ளார்.
பின்னர், சிறுமியை தனது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். எதற்கும் அஞ்சாத அந்த சிறுமியின் பாட்டி காவல் துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.