கடந்த ஜூலை 18ஆம் தேதி போக்சோ மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று போக்சோ மசோதாவின் மீதான விவாதம் நடைபெற்றபோது மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் பேசினார்.
13 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் -மௌனம் கலைத்த டெரிக் ஓ பிரையன்
புதுடெல்லி: 13 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”குழந்தைகள் துன்புறுத்தப்படுவது தொலைக்காட்சியிலோ, வெளியிலோ தொடங்கவில்லை. முதலில் நமது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதனால், குழந்தைகளை யார் எந்த எண்ணத்தில் தொடுகின்றனர், அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”எனக்கு 13 வயது இருக்கும்போது டென்னிஸ் பயிற்சிக்கு சென்றுவிட்டு கொல்கத்தா சிட்டி பஸ்ஸில் பயணித்தேன். அப்போது யாரென்று தெரியாத நபர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்” என வெளிப்படையாக பேசினார்.