தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2019, 10:04 AM IST

Updated : Oct 12, 2019, 10:14 AM IST

ETV Bharat / bharat

’நாமே துப்புரவாளராக மாற வேண்டும்’ - காந்தி வழியில் மோடி!

அதிகாலை உடற்பயிற்சி செய்வதற்காக கோவளம் கடற்கரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த குப்பைகளை வெறும் கைகளில் அகற்றிய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

modi clean garbage at mahabalipuram beach

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முதலாம் நாள் சந்திப்பை முடித்துவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். காலையில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை கோவளம் கடற்கரைக்கு வந்தபோது, அப்பகுதியில் குப்பைகள் கிடப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து, உதவியாளர்களை அழைத்து குப்பைகளை அகற்றச் சொல்லாமல், தானே குப்பைகளை அகற்றினார் மோடி.

அலைகளை ரசிக்கும் நரேந்திர மோடி

அப்போது மோடி கையுறை கூட அணியாமல் சுமார் அரை மணி நேரம் குப்பைகளை அகற்றினார். மோடியின் இச்செயலைக் கண்ட பலரும் நெகிழ்ந்துள்ளனர். பிரதமரே குப்பைகளை அள்ளியிருக்கிறாரே என்று ஆச்சர்யத்துடன் சமூக வலைத்தளவாசிகள் மோடியை பாராட்டிவருகின்றனர். ’ஸ்வச் பாரத்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடாமல், தன்னுடைய செயலிலும் அதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார் பிரதமர் மோடி எனவும் அவரது ஆதரவாளர்கள் சிலாகிக்கின்றனர்.

குப்பையை அகற்றும் மோடி

ஒருவகையில் பார்த்தால் மோடி மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றியிருக்கிறார். ஆம், “நாம் இருக்கும் இடத்தில் குப்பைகள் இருந்தால் நாமே துப்புரவாளராக மாற வேண்டும்” என்ற காந்தியின் வார்த்தையை அடியொற்றிதான் பிரதமர் மோடி இச்செயலை செய்துள்ளார் என்பது நமக்குத் தெரியவருகிறது.

இதையும் படிங்க:’நாமே துப்புரவாளர்களாக மாற வேண்டும்’ - காந்தி கண்ட தூய்மை பாரதம்

Last Updated : Oct 12, 2019, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details