இதுதொடர்பாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், "நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நல்லதற்கில்லை. பிரதமர் எப்போதும் உள்துறை அமைச்சரை (அமித் ஷா) சார்ந்திருப்பதற்குப் பதிலாக இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தை விட தனக்கு அதிக பொறுப்புகள் உள்ளதை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும். நாடு எதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்தல் வேண்டும். இதனை அவர் புரிந்துகொண்டு, நாட்டு மக்களுடன் பேசுவார் என்று நம்புகிறேன்.
ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை முன் எப்போதும் நிகழாத ஒன்று. நடிகை தீபிகா படுகோண் நடித்துள்ள சப்பாக் திடைப்படம் மீதான வரியை விலக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என்றார்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தை எதிர்த்து ஜே.என்.யூ. மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பாலிவுட் நடிகை திபிகா படுகோண் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்..
அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பு
இதையும் படிங்க : ஜேஎன்யு விவகாரம்: தீபிகாவை சாடிய முன்னாள் மத்திய அமைச்சர் இதன் காரணமாக, சமூக வலைதளங்கள் நடிகை திபிகா படுகோணுக்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதைக் குறிப்பிட்டே ராஜஸ்தான் முதலைச்சர் அசோக் கெலாட் இவ்வாறு பேசியுள்ளார்.