தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அவசர நிலை பிரகடனத்திற்கு எதிரான லட்சுமணனின் செயல்பாடுகள் நினைவுகூரத்தக்கது - மோடி

டெல்லி: பாஜக மூத்த தலைவர் லட்சுமணன் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக செயல்பட்டதை என்றென்றும் நினைவுகூரலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi
Modi

By

Published : Jun 2, 2020, 4:53 PM IST

பாஜகவின் மூத்தத் தலைவர் கே.என். லட்சுமணன் (92), உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக அவர் செயல்பட்டதை என்றென்றும் நினைவுகூரலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "லட்சுமணனின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்து பாஜகவை அங்கு வளர்த்ததில் முன்னணியில் இருந்தவர் லட்சுமணன். அவசரநிலை பிரகடனத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் சமூக கலாசாரத்தில் அவரின் பங்கினையும் என்றென்றும் நினைவுகூரலாம்" என பதிவிட்டுள்ளார்.

சேலம் மாநகரில், செவ்வாய்பேட்டையில், 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பிறந்த லட்சுமணன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) 1944ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டார். நா.பா. வாசுதேவன், ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில் கே.என். லட்சுமணன் மாநில பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவராக லட்சுமணன் இரண்டு முறை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details