தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: முக்கியத்துவம் வாய்ந்த 2ஆம் நாள்!

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று இருநாட்டு உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Modi

By

Published : Oct 12, 2019, 8:14 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை 9 மணிக்கு இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொடங்கவுள்ளது. ஐ.டி.சி. கிராண்ட் சோழாவிலிருந்து தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் (ITC Grand Chola to Taj Fishermen's cove) உணவகத்திற்கு காலை 9 மணிக்கு சீன அதிபர் புறப்படவுள்ளார்.

9:40 மணிக்கு தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் உணவகத்திற்கு வந்தடையும் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு மச்சான் (Machan) உணவகம் வரை மரங்களின் நிழல் வழியே சிறிது நேரம் இருநாட்டுத் தலைவர்களும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். டெட்-இ-டெட் (Tete-e-tete) சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் இடைவேளை நடைபெறவுள்ளது. பின்னர், அங்கிருந்து டான்கோ ஹாலுக்கு (Tango Hall) இருநாட்டுத் தலைவர்களும் புறப்படுகின்றனர். காலை 11:30 மணிக்கு நடைபெறவுள்ள உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு, கசாரினா உணவக விடுதியில் இருநாட்டுத் தலைவர்களும் (Casuarina Hall) மதிய உணவு உண்ணவுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஜி ஜின்பிங் செல்லவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details