இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்துவருகின்றனர். புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாளில்தான் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சியளித்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இதனை அவர்கள் ஈஸ்டராக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளியை கிறிஸ்துவர்கள் கொண்டாடிவருகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று நடத்தப்பட்டுவருகின்றன. இதனிடையே, பிரதமர் மோடி புனித வெள்ளிக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.