மாநில முதலமைச்சர்களுடன் ஆறாவது முறையாக காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வெகுவாக[ பாராட்டினார். பஞ்சாப் மாநில அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாகக் கூறிய பிரதமர், பஞ்சாபை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற அனைத்து மாநிலங்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாபை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
சண்டிகர்: பஞ்சாபின் கோவிட் மைக்ரோ கன்டெய்ன்மென்ட் மற்றும் வீடு வீடாகக் கண்காணிப்பு ஆகிய செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மற்ற மாநிலங்களும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியிடம், சில மாநில முதலமைச்சர்கள் உள்பட திறன் வாய்ந்த அலுவலர்களை இணைத்து கரோனா தடுப்பு உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க பிரதமரிடம் பரிந்துரை செய்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில், வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே பஞ்சாப் மாநிலத்தில் உள்ளனர். அதிலும் 75 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.