டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஷாஹீன் மாலிக் (37) என்பவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், டெல்லியில் அமில விற்பனையைக் கட்டுப்படுத்த சட்டரீதியான விதிகள் எதுவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும் டெல்லியில் சில்லறைக் கடைகளில்கூட அமில விற்பனை எளிதாக நடைபெறுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் தலைநகரில் அமில விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும், விற்பனை விதிகளையும் அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருந்த ஷாஹீன் மாலிக், லக்ஷ்மி அகர்வால் அமிலத் தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது, ஆனால் அதை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.