தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஐய்யப்பன் கோவிலை அடுத்து மசூதிகளில் பெண்கள்'  உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்..?

புதுடெல்லி: இஸ்லாமிய பெண்களை மசூதியில் அனுமதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று்க்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐய்யப்பன் கோவிலை அடுத்து பெண்கள் மசூதிகளில் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதி ?

By

Published : Apr 16, 2019, 1:04 PM IST

புனேவைச் சேர்ந்த ஜூபர் அகமது தம்பதியர், மசூதிகளில் பெண்கள் எந்தவித பாகுபடுமின்றி வழிபட அனுமதி வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொள்ளும் முன் உச்சநீதிமன்றம், ஒருவர் தம்முடைய வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதிக்க மறுத்தால் அதற்கு காவல்துறையினர் தலையிட்டு எவ்வாறு அனுமதியை வாங்கித் தரமுடியும்' என்று மனுதாரர்களிடம் எதிர் கேள்வி எழப்பியது.

இதற்கு பதிலளித்துள்ள மனுதாரர்கள், 'மசூதிகளில் பெண்கள் நுழைய தடைவிதிப்பது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14,15,21,25 மற்றும் 29 ஆகிய பிரிவுகளின் படி குற்றம். ஐய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அனுமதி வழங்கியதும் இதே சட்டப்பிரிவுகளில் கொண்டுதான்' என்று குறிப்பிட்டனர்.

மேலும் குரான் ஆண், பெண் என்ற வித்தியாசங்களை பார்ப்பதில்லை, இறைநம்பிக்கையை மட்டுமே பேசுகிறது என்றும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details