பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அல்லது வேறு எந்த நீதித்துறையும் அனுமதி வழங்காமல் செய்திகளை பிரசுரிக்கிற, ஒளிபரப்புகிற ஊடகவியலாளர்கள் மீது எவ்வித வழக்கையும் பதிவுசெய்யக் கூடாது என உத்தரவிடக்கோரி மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை, நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் ஆஜராகி, சில செய்தித் தொலைக்காட்சிகள் குறிவைக்கப்பட்டு அதிகப்படியான வழக்குகள் அத்தொலைக்காட்சியின் மீது பதிவு செய்யப்படுவதாகவும் அதன்மூலம் ஜனநாயகத்தின் குரல்வலை நெறிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசே முடிவு எடுக்கும் எனவும் நீதிமன்றம் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்காது எனவும் நீதிபதி பாப்டே தலைமையிலான குழு தெரிவித்தது. மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், "இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500 (அவதூறு பரப்புவதற்கான தண்டனை), 153-ஏ (இரு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) உள்ளிட்ட தண்டிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது.
நீதித்துறை, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அனுமதி வழங்காமல் ஊடகவியலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது" என மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இதையும் படிங்க:மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு!