தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரக்கு ரயில் சேவைக்கான புதிய இணையதளம்: பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு

சரக்கு ரயில் சேவையை எளிமையாக்கும்விதமாக புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கிவைத்தார்.

Union Railway Minister Piyush Goyal
Union Railway Minister Piyush Goyal

By

Published : Jan 5, 2021, 7:25 PM IST

டெல்லி:சரக்கு ரயில் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் பொருள்களை எளிய முறையில் அனுப்பும் வகையில் ஒன் ஸ்டாப் - ஒற்றைச்சாளர இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது வாடிக்கையாளர்கள் எளிய முறையில் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தளவாடங்களின் விலை குறைக்கப்பட்டு, சப்ளையர்கள் தாங்கள் அனுப்பும் பொருள்களை லைவ் டிராக் செய்ய முடியும். இந்த இணையதளத்தினை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கிவைத்தார்.

பின்பு பேசிய அவர், "கரோனா காலத்தில் பொருள்களை பிற இடங்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பதிலுள்ள சவால்களை ரயில்வே துறை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இந்தப் புதிய இணையதளம் ஒரு கேம் சேன்ஞ்சராக இருக்கப் போகிறது. இதன்மூலம் ரயில்வேயுடன் எளிய முறையில் வர்த்தகம் செய்ய முடியும்.

வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க முடியும். ஜிஐஎஸ் (GIS) மூலம் தாங்கள் அனுப்பும் சரக்குகளை லைவ் டிராக் செய்ய முடியும். அதேபோல இணையதளத்தில் சலுகைகள், திட்டங்கள், மறுபதிவுகள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும்" என்றார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ரயில்வே மூலமாக 118.13 மில்லியன் டன்கள் சரக்குகள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது 2019ஆம் ஆண்டைக்காட்டிலும் 8.54 விழுக்காடு அதிகமாகும். இதன்மூலம் இந்திய ரயில்வே துறைக்கு 2020ஆம் ஆண்டு 11 ஆயிரத்து 788 கோடி ரூபாய் வருவாயும், 2019ஆம் ஆண்டு 11 ஆயிரத்து 30 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:தொழில்நுட்ப படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details