தமிழ்நாடு

tamil nadu

தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!

கர்நாடகா: தலித் மக்கள் தொடர்ந்து தக்கப்படுவதைக் கண்டித்து, சாம்ராஜ்நகர் பகுதியில் தலித் கூட்டமைப்பு சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

By

Published : Jun 25, 2019, 10:11 PM IST

Published : Jun 25, 2019, 10:11 PM IST

ETV Bharat / bharat

தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!

தலித் மக்கள் தாக்கபடுவதைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்குட்பட்ட, குண்டல்பேட் பகுதியில், கடந்த வாரம் தலித் இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதற்காக, சமூக விரோதிகள் சிலரால் கொடுமைப்படுத்தப்பட்டார். அவரை கைது செய்யக் கோரியும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. அதேபோல், கடந்த இரண்டு வருடம் முன்பு, சோமார்பேட் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்த நபர்களைக் கைது செய்து, உடனே விடுதலை செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினரை கண்டித்தும், தங்களுக்கு உரிய நியாயம் வேண்டியும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சப்பா சர்க்கில் பகுதியில் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியும், டையர்களை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

அதேபோல், தாளவாடி மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற பேருந்துகள் மாற்றுப் பாதையில்; அதாவது சாம்ராஜ்நகர் பகுதிக்குள் செல்லாமல், மைசூர் - பெங்களூர் சென்று வந்தன. இந்த முழு அடைப்பால் நகர் பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details