தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

CAB Issue: கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய பிரஷாந்த் கிஷோர்

பாட்னா: ஜேடியுவின் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர் பதவியை விட்டு விலகுவதாக கட்சித் தலைவர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : Dec 15, 2019, 1:28 PM IST

Peeved over JDU's support to citizenship law  Prashant Kishor offers resignation to Nitish Kumar  ராஜினாமா கடிதம் அனுப்பினார் பிரஷாந்த் கிஷோர்  பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா  பிரசாந்த் கிஷோர் ராஜினாமா
Prashant Kishor offers resignation to Nitish Kumar

ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். இவருக்கும் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கும் கருத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்து வந்தன. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பின் இம்மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதாவுக்கு ஜேடியு தலைவர் நிதிஸ் குமார் ஆதரவளித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் குழப்பம்?

ஆனால், பிரஷாந்த் கிஷோரோ குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இவ்வேளையில் கட்சி நிலையில் விருப்பமற்ற சூழல் உருவானதால், தன் பதவியை விட்டு விலகுவதாக, கட்சித் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் கட்சியின் தலைமை இவரின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details