தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'லடாக் சீனாவுக்குச் சொந்தமா' - ட்விட்டர் பிரதிநிதிகளை விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு!

டெல்லி: லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது குறித்து ட்விட்டரின் நான்கு பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.

twit
twit

By

Published : Oct 28, 2020, 7:10 PM IST

தரவுப் பாதுகாப்பு மசோதா 2019 தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ட்விட்டரின் பிரதிநிதிகள் ஆஜரானார்கள். அப்போது லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது குறித்து உறுப்பினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் ஷாகுப்தா கம்ரான், பல்லவி வாலியா உள்ளிட்ட ட்விட்டர் பிரதிநிதிகள் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூட்டுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்திய வரைபடத்தை தவறாகச் சித்திரித்த ட்வீட்டைக் கண்டித்து மத்திய அரசாங்கம் சார்பில் ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலருக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details