நாடாளுமன்றத்தில் மொத்தம் 24 நிலைக்குழுக்கள் உள்ளன. துறை சார்ந்த முடிவுகள் எடுப்பதில் இவை முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக அமைச்சகம் சார்ந்த சட்டங்கள் இயற்றும்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. இந்த நிலைக்குழு உறுப்பினர்களாக எம்பிக்கள் இருப்பர், அமைச்சகத்தின் கணக்கு வழக்குகளை இக்குழு ஆராயும். தற்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் புதிய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரங்கள் பின்வருமாறு..
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நியமனம்
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோர் மனிதவள மேம்பாட்டு துறைக்கான நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருச்சி சிவா (திமுக) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்துக்கு கேபி முனுசாமி (அதிமுக), நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு என்.ஆர். இளங்கோ (திமுக) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.