நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான திட்டமிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடருக்கான ஆயத்தப் பணிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, மொத்தம் 18 அமர்வுகள் நடைபெறும் வகையில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அரங்குகள் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1952ஆம் ஆண்டுகளுக்குப் பின் இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் இதுபோன்ற அமர்வு முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பாதியிலேயே அவசரமாக முடிக்கப்பட்டது. நாடாளுமன்ற மரபின்படி ஆறு மாதத்திற்குள் அடுத்த கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரள தலைமை செயலகத்தில் தீ விபத்து; எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்!