தமிழ்நாடு

tamil nadu

கரோனா நோயாளிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்?

ஸ்ரீநகர்: கரோனா நோய்த் தொற்று பாதித்துள்ள பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஊடுருவ வைப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

By

Published : Apr 22, 2020, 6:13 PM IST

Published : Apr 22, 2020, 6:13 PM IST

Updated : Apr 22, 2020, 7:38 PM IST

corona
corona

ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தலைவர் தில்பாக், அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கரோனா குவாரன்டைன் (தனிமைப்படுத்தல்) மையங்களில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "இதுவரை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்குப் பயங்கரவாதிகளை அனுப்பிவந்த பாகிஸ்தான் தற்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது" எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், மக்களிடையே நோயைப் பரப்பும் சதித் திட்டத்தை அவர்கள் செயல்படுத்தலாம் என்பதால், அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க : துருக்கியில் சூப்பர் மார்க்கெட்டாக மாறிய மசூதி!

Last Updated : Apr 22, 2020, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details