குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் பகுதியில், எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் பிஎஸ்எஃப் வீரர்கள் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்பதும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சித்ததும் தெரியவந்தது.
எனினும் அவரிடம் சட்டவிரோதமாக பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது குறித்து பிஎஸ்எஃப் அலுவலர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் மாநில காவலர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள்” என்றார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பது வழக்கமான நிகழ்வாக மாறிஉள்ளது.
இதையும் படிங்க: அஞ்சாமல் உண்மையை சொல்லுங்க - கல்வான் மோதல் குறித்து ராகுல் கேள்வி