கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நிபுணர் குழு பரிந்துரை!
18:00 January 01
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுமுடிந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பாரத் பயோடெக் நிறுவனமத்திடம் நிபுணர் குழு கூடுதல் தரவுகளை கேட்டுள்ளது. அனுமதிக்காக விண்ணப்பித்திருந்த இந்த இரண்டு நிறுவனங்களும் நிபுணர் குழுவுக்கு தடுப்பூசியை டிசம்பர் 30ஆம் தேதி அறிமுகம் செய்தன. தங்களின் தரவுகளை அறிமுகல் செய்ய ஃபைசர் நிறுவனம் கூடுதலாக அவகாசம் கேட்டுள்ளது. ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் இந்த மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாளை அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது.