தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிணங்களின் மீது அரசியல் செய்கிறது பாஜக - ஓவைசி சாடல்

டெல்லி: பிணங்களின் மீது அரசியல் செய்யும் பாஜக இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைக்காது என எ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Breaking News

By

Published : Mar 12, 2020, 1:19 PM IST

டெல்லி வன்முறை குறித்து நேற்று கூடிய நாடாளுமன்ற அவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவரின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார்.

அவர் கூறும்போது, "அமித் ஷா பேசுவது உள் துறை அமைச்சர் போன்று இல்லை. மாறாக, பாஜகவின் செய்தியை பரப்புவர் போல உள்ளது. வன்முறையில் உயிர், உடமை, வீடு, உறவினர்களை இழந்த இஸ்லாமியர்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஆய்வு முடிவு, நீதியை பெற்றுத் தராது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.

சீக்கியர்களுக்கு எதிராக 1984ஆம் ஆண்டில் மூண்ட கலவரத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. 2002ஆம் ஆண்டில் நடத்த பாபர் இடிப்பு தொடர்பான விவகாரத்தில் இன்னும் இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதேதான் தற்போதும் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.

இந்தக் கலவரம் தொடர்பாக, இரண்டாயிரத்து 500 பேரைக் காவலில் வைத்துள்ளது குறித்து பேசிய அவர், "நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இதைச் சொல்கிறேன். காவலில் இருப்பவர்களின் பெயர்களைத் தெரிவித்தால், எல்லாம் தெரியவரும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் சூரையாடப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன.

பாஜக, இஸ்லாமியர்களின் பிணங்களின் மீது அரசியல் செய்கிறது, அமித் ஷா நல்லிணக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்னைக்கும் அதே தேதி: 'இருக்கு தரமான சம்பவம்' - ரஜினிக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் மீம்!

ABOUT THE AUTHOR

...view details