உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் காசிம், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து காவலர்கள் ரகசிய விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் அவரது வீடு, பல்கலைக்கழக இருப்பிடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் கைது
ஹைதராபாத்: மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி உஸ்மானியா பல்கலைக்கழக இணை பேராசிரியர் காசிம் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் நேற்று காவலர்கள் அவரின் பல்கலைக்கழக இருப்பிடத்தில் சோதனை நடத்தினர். இதில் அவர் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பான சில ஆவணங்களும் காவலர்கள் கைகளில் சிக்கியது. இதையடுத்து இணை பேராசிரியர் காசிம்மை காவலர்கள் கைது செய்தனர். இந்தத் தகவலை காவல் ஆணையர் ஜோயல் டேவிஸ் உறுதி செய்தார்.
மேலும், காசிம் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பிலிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உஸ்மானியா பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஒருவர் சட்டவிரோத தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆலன், தாஹாவை என்.ஐ.ஏ விசாரிக்கக்கோரும் வழக்கு : 21ஆம் தேதி தீர்ப்பு