காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சில தலைவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மட்டும் வீட்டு சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "ஜனநாயக விதிகள், அடிப்படை உரிமைகள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் நசுக்கப்படுகின்றனர். கடந்த ஏழு மாதங்களாக முன்னாள் முதலமைச்சர்களை வீட்டு சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என தெரியவருகிறது.