இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று இன்றுடன் (மே 30) ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த சில மாதத்திலேயே ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் சட்டத்தில் மாற்றம், குடியுரிமை திருத்தச் சட்டம், யுப்பா சட்டத்தில் மாற்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் என பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளபோதும் இந்தியாவின் பொருளாதாரம் சரிவை நேக்கிச் சென்றுவருகிறது.
மேற்கண்ட சில நடவடிக்கைகளுக்கு எதிராக கரோனா லாக்டவுன் அறிவிக்கப்படும்வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு ஓராண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள், முடிவு குறித்து ஒரு பார்வை.
சட்டப்பிரிவு 370
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. தன்னுடைய நீண்டகால வாக்குறுதியான பாஜக நிறைவேற்றிய நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியது.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்
விவசாயிகளின் வருவாயை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்பது பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 2016ஆம் ஆண்டு நபார்டு வங்கி இதற்கான செயல்திட்டத்தை வகுத்துகொடுத்துள்ளது. நிதி ஆயோக் இந்த செயல்திட்டத்தை 2017ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 8.52 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 62,000 கோடி முதல்கட்டமாக வழங்கப்பட்டது.
உலகின் மூற்றாவது பெரிய பொருளாதார கனவு
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக முன்னேற்றுவதை லட்சியமாக மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஆனால் நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் 6.1 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காடாக குறையும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
உப்பா சட்டத்தில் மாற்றம்