கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும் அதேசமயம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டத்தில் வீக்எண்ட் ஷட்டவுன் என்ற புதிய அறிவிப்பை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.
அதன்படி கஞ்சம், புரி, கட்டாக், தயார், கோர்டா, ஜகஸ்டிங்பூர், கேந்திரபாரா, ஜஜ்பூர், பத்ராக், பாலாசோர், பாலாங்கிர் ஆகிய 11 மாவட்டத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் பணி நாட்களாவும், சனி ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என்ற புதிய அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இரு நாள்களில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவை சார்ந்த பணிகளான மருத்துவம், தீயணைப்புத்துறை, தூய்மை உள்ளிட்ட பொது சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.