லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி அருகே கடந்த மே 5ஆம் தேதி இருதரப்பு ராணுவத்தினருக்குமிடையே மோதல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடைபெற்று நான்கு நாள் கழித்து சிக்கிமில் உள்ள நாகு லா பாசில் இன்னொரு மோதல் வெடித்தது.
இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (இந்தியா-சீனா எல்லை) அருகே வழக்கத்துக்கு மாறாக இருநாட்டினர் அதிகளவில் தங்களது ராணுவத்தினரைக் குவித்துள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் அங்குப் பதற்றம் தொற்றியுள்ளது.
2017ஆம் ஆண்டு நடந்த டோக்லாம் பீடபூமி மோதலுக்குப் பிறகு, இந்தியா-சீனா இடையே எழுந்துள்ள இந்த புதிய மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தப் பிரச்னை உலக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "மோடியின் இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்