இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் அமெரிக்கா 1974ஆம் ஆண்டு முதல் வரி விலக்கு அளித்துவந்தது. இதனை அமெரிக்கா ஜூன் மாதம் திரும்பப்பெற்று கொண்டது. இதனால், இந்தியாவும் அமெரிக்காவின் 25 பொருள்களுக்கு கடும் வரிவிதித்தது.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிகழவில்லை - பியூஷ் கோயல்
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிகழவில்லை என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர், "அமெரிக்காவுடன் எந்த பிரச்னையும் இல்லை. இருநாட்டு உறவுகளில் பிரச்னை இருப்பது இயல்பான ஒன்று. எனவே, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிகழவில்லை. அந்நிய நேரடி முதலீட்டில் 100 விழுக்காடு அனுமதித்துள்ளோம்.
சர்வதேச அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய முனைப்பு காட்டப்பட்டுவருகிறது. எரிவாயு உற்பத்தி செய்ய தொழில்நுட்பங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. தேச பாதுகாப்பு தொடர்புடைய துறையை தவிர மற்ற அனைத்திலும் அந்நிய நேரடி முதலீட்டினை இந்திய அனுமதித்துள்ளது" என்றார்.