மேற்கு வங்காளத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் நேற்று (மே 13) மூடப்பட்டிருந்தது. இதற்கு காரணம் இருப்பு பற்றாக்குறையே என்று மதுபான உரிமையாளர் சங்கத்தின் அலுவலர் ஒருவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
"மாநிலத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஊரடங்கு விதிமுறைகளுக்கிணங்க குறைந்த பணியாளர்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலை சீராக ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம்.
அதே நேரம் விற்பனை விலைக்கு 30 சதவிகித விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களின் மூலதன தேவைகள் அதிகரித்துள்ளன. இதற்கு உதவும் வகையில் அரசங்கத்திடமும், வங்கியிலும் எவ்வித கொள்கையும் இல்லை.
ஆன்லைனில் ஆர்டர் செய்து மதுபானங்களை வீட்டில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. ஆனால் மதுபானங்கள், மதுபாட்டில்களை சேமித்து வைக்கும் மேற்கு வங்காள மாநில பானங்கள் கழகத்தின் (BEVCO) நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தநிலை வெகுவிரைவில் சிறப்பாக மாறும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ரயில் சேவை ஜுன் 30 வரை ரத்து!