தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸால் பால் உற்பத்தியில் பாதிப்பா?

By

Published : Mar 23, 2020, 3:32 PM IST

காந்திநகர்: கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பால் பொருள்களின் உற்பத்தி எதுவும் பாதிக்கப்படவில்லை என்று அமுல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amul
Amul

சீனாவில் பரவத் தொடங்கி கோவிட்-19 வைரஸின் பாதிப்பு தற்போது அங்கு குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சோதி கூறுகையில், "கோவிட்-19 வைரஸ் தொற்றால் இதுவரை பால் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுவரை பால் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படவில்லை. குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பால் கொள்முதலில் எவ்வித பாதிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் கடந்த வாரம் மட்டும் 10-12 விழுக்காடு வரை பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. நாடெங்கும் உள்ள மக்களுக்கு போதிய அளவில் பால் கிடைக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்றார்.

அதேபோல பால் என்பது அத்தியாவசிய பொருள் என்பதால் அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். தயிர், நெய் போன்றவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏன்?

ABOUT THE AUTHOR

...view details