தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன அழுத்ததிலிருக்கும் நிர்பயா குற்றவாளிகள்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை நினைத்து மன அழுத்ததில் உள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Nirbhaya convicts under depression, police keep a close watch:Tihar jail sources
Nirbhaya convicts under depression, police keep a close watch:Tihar jail sources

By

Published : Dec 14, 2019, 6:52 AM IST


2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவரான ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட அக்‌ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா ஆகிய நால்வரும் மன அழுத்ததில் உள்ளதாகவும், அதனால் அவர்கள் நால்வரையும் கண்காணித்து வருவதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் தூக்கிலடப்படும் இடத்தை மூத்த அதிகாரிகள், திகார் காவல் ஆணையர் சந்தீப் கோயல் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.

இதையும் படிங்க...அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details