தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 11:43 AM IST

ETV Bharat / bharat

தெலங்கானாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் செயற்பாட்டாளர் கைது!

டெல்லி: தெலங்கானாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் செயற்பாட்டாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்

nia-arrests-key-maoist-supporter
nia-arrests-key-maoist-supporter

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 41 வயது மதிக்கத்தக்க நலமாச கிருஷ்ணா. இவர், தெலங்கான பிரஜா முன்னணி என்ற அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் இவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்தனர்.

இதையடுத்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம், நல்லகுண்டா காவல் நிலையத்தில் இவரது செயல்பாடுகள் குறித்து புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவரிடமிருந்து தெலங்கானா வித்யார்தி வேதிகா என்ற அமைப்பின் தலைவரான பண்டாரி மத்திலேட்டி குறித்த ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற விசாரணையில், நலமசா கிருஷ்ணா சத்திஸ்கரிலுள்ள முக்கிய மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

இவர் சத்திஸ்கர் காடுகளின் வழியே பயணித்து, அடிக்கடி முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவர், ஜனநாயகச் செயல்முறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details