தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

ஈடிவி பாரத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக காணலாம்.

NEWS TODAY - October 20
NEWS TODAY - October 20

By

Published : Oct 20, 2020, 6:20 AM IST

மீனாட்சி அம்மன் விறகு விற்றல் அலங்கார தரிசனம்:

உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மன் இன்று விறகு விற்றல் அலங்காரத்தில் காட்சி தருவார்.

மீனாட்சி அம்மன் விறகு விற்றல் அலங்கார தரிசனம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்திடக் கோரியும் இன்று (அக்டோபர் 20) ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:

சிறப்பு ரயில் சேவை தொடக்கம்:

இன்று (அக்டோபர் 20) முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பல்வேறு பண்டிகைகள் இருப்பதால், 392 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் இச்சேவையானது தொடங்குகிறது.

சிறப்பு ரயில் சேவை தொடக்கம்:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

ஐபிஎல் 2020:

இன்று கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2020:

ABOUT THE AUTHOR

...view details