இந்துக் கடவுளான லட்சுமி படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இக்கருத்திலிருந்து சுப்பிரமணியன் சுவாமி பின்வாங்கியுள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்தோனேசியா ரூபியாவின் மதிப்பு சரிவை நோக்கிச் சென்றபோது, நோட்டுகளில் இந்துக் கடவுளான விநாயகர் படத்தை அச்சிலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையை அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஏற்றார். ரூபியாவின் மதிப்பு உயர இந்நடவடிக்கை உதவியது என ஒரு கூட்டத்தில் பேசினேன். இதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் சிரித்தனர்.