தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2020, 11:31 PM IST

ETV Bharat / bharat

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி - மம்தா புகழாரம்

கொல்கத்தா: இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

Mamata Banerjee on Netaji
Mamata Banerjee on Netaji

சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறார். நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸ் இந்து மகா சபாவின் பிரித்தாளும் அரசியலை கடுமையாக எதிர்த்தார். அவர் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கவே கடுமையாக போராடினார். ஆனால் இப்போது, மதசார்பின்மையை பின்பற்றுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

மத்திய அரசு நேதாஜியின் இறுதி காலம் குறித்த கோப்புகளை வெளியிட வேண்டும். 70 ஆண்டுகள் ஆன பின்னரும் அவருக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாமல் இருப்பது நமக்கு கேவலம்" என்றார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details