தமிழ்நாடு

tamil nadu

'இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்கப் பார்க்கும் நேபாளம்!'

By

Published : Jun 16, 2020, 7:55 AM IST

திருவனந்தபுரம் : இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து நேபாளம் தனது திட்டங்களைச் சாதிக்க நினைப்பாக நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் முன்னாள் இந்தியத் தூதரும், சர்வதேச அரசியல் வல்லுநருமான டி.பி. ஸ்ரீனிவாசன் கூறினார்.

Former Diplomat TP Sreenivasan
Former Diplomat TP Sreenivasan

இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "நேபாளம் தற்போது எடுத்துள்ள முடிவு இந்தியாவைச் சீண்டும் வகையில் அமைந்துள்ளது. நேபாள அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளை இந்தியாவுக்கு அந்நாடு திரும்பத் தர முடியாமல் போய்விடும்.

இந்தியாவை இதற்கும் மேலும் நேபாளம் சீண்டாது என்றும், சட்டத்திருத்த மசோதாவை முன்னெடுத்துச் செல்லாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் பிரச்னையைத் தீர்க்கும் என நம்புவோம்.

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து நேபாளம் தான் நினைத்ததைச் சாதிக்கப் பார்க்கிறது. சீனாவுடனான உறவையும் பலப்படுத்தவும், இந்த யுக்தியின் மூலம் இந்தியாவிடமிருந்து நிலப் பகுதிகளை அடையவும் நேபாளம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் நேபாளம் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாது. இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் காஸ்லியான கச்சா எண்ணெய் நேபாளத்துக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போது நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் நரேந்திர மேற்கொண்ட நேபாள பயணம் பயனளிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தோ-சீனப் போருக்குப் பிறகு, சீனாவின் அழுத்தம் காரணமாகவே நேபாள எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளை நீக்குமாறு அந்நாடு வலியுறுத்தியது, இதற்கு இந்தியா செவிசாய்த்தது. ஆனால், அப்போதுகூட காலாபனி பகுதியைக் கொடுக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இந்த அவசர முடிவை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், நேபாள மக்களின் தேசியவாத உணர்வைத் தூண்டிவிட்டு, பதவியைத் தக்கவைக்க நினைக்கிறார்" என்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளைத் தங்கள் எல்லைக்குள்பட்டதாகச் சித்திரித்துக் கடந்த மாதம் நேபாள அரசு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது.

இந்த வரைபடத்தை அங்கீகரித்து நேபாள அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு, நேற்று அது ஒருமனதாக நிறைவேறியது. இது, இந்திய - நேபாள நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :'நினைத்தாலே பீதியாகுது' - நேபாளத்தினரின் தாக்குதல் குறித்து கண்ணீர் மல்க விவரிக்கும் சாட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details