தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முக்கியத்துவம் வாய்ந்த தேஜகூ எம்எல்ஏக்கள் கூட்டம்!

பாட்னா: பிகார் தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

By

Published : Nov 15, 2020, 1:13 PM IST

Kumar
Kumar

பிகார் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், அக்கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னவிஸ், மாநில பொறுப்பாளர் புபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பது குறித்து பூபேந்திர யாதவ் இன்று அறிவிப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் சட்ட மேலவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுப்படுபவரே துணை முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

முன்னதாக, மாநில ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details