தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவலரின் பெற்றோரைக் கடத்திச் சென்ற நக்சல்கள்

ராய்பூர்: தண்டேவாரா மாவட்டத்தில் காவலர் ஒருவரின் பெற்றோரை நக்சல்களால் கடத்திச் சென்றுள்ளனர்.

Naxals abduct parents
Naxals abduct parents

By

Published : Jul 7, 2020, 6:19 PM IST

இந்தியாவில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக சத்தீஸ்கர் இருந்துவருகிறது. கடந்த ஜுலை 2ஆம் தேதி ஜங்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்வாடா கிராமத்தில், காவலர் ஒருவர் அவரது வீட்டில் பெற்றோர் கண்முன்னே நக்சல்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்த காவலர் சோமரு போயம், ஃபர்சேகர் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தார். ஜூன் 10ஆம் தேதி மருத்துவ விடுப்பில் வீட்டிற்குச் சென்ற நிலையில், ஜூலை 1ஆம் தேதி இரவு அவரது வீட்டிற்குள் நுழைந்த 12 நக்சல்கள் கோடாரி, அம்புகளால் சோமரு போயமை கொடூரமாகத் தாக்கி, கொலைசெய்துள்ளனர். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது பெற்றோரையும் நக்சல்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். காவல் துறையினர் போயம் பெற்றோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்றிரவு தண்டேவாரா மாவட்டம் குமியபால் பகுதியில் காவலர் ஒருவரின் பெற்றோரை நக்சல்கள் கடத்திச் சென்றதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்களை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் 6 நக்சலைட்டுகள் கைது: 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details