தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக? - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

டெல்லி: பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Narendra modi

By

Published : May 19, 2019, 7:25 PM IST

Updated : May 19, 2019, 11:47 PM IST

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்தது. தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது. பாஜக மீது நாடு முழுவதும் அதிருப்தி நிலவுவதாகவும், இதனால் பாஜக வீட்டுக்கு செல்லப்போவது உறுதி என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இதற்கிடையே, காங்கிரசுடன் மாநிலக் கட்சிகளை இணைக்க தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்தித் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரைச் சந்தித்தார். மேலும், இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி,

மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

செய்தி நிறுவனத்தின் பெயர் பாஜக காங்கிரஸ் மற்றவை
டைம்ஸ் நவ் 306 132 104
ரிபப்ளிக் 287 128 127
என்டிடிவி 300 127 115

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்.டி.டிவி வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பின்படி

திமுக கூட்டணி 11

இடங்களிலும், அதிமுக கூட்டணி 25 இடங்களிலும்,

பிற கட்சிகள் 2

இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி 34 இடங்கள்,

அதிமுக கூட்டணி 4 இடங்கள், பிற கட்சிகள் 1 இடத்தையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 19, 2019, 11:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details