இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 26 ஆயிரத்து 468 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரசை எதிர்த்துப் போராடவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் காணொலி மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.
கோவிட் -19யை எதிர்கொள்வதில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வல்லுநர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார். தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துதல், கரோனா சூழ்நிலையைச் சமாளித்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டன.
கரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு வல்லுநர்கள் பாராட்டியுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'கரோனாவை இந்தியா - நெதர்லாந்து அரசுகள் இணைந்து எதிர்கொள்ளும்'