தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் ஐபிஎஸ் அலுவலராக நடித்து 15 லட்சம் சுருட்டியவர் கைது!

மும்பை: ஐபிஎஸ் அலுவலராக வேடமணிந்து தொழிலதிபரை கடத்தி சென்று 15 லட்சம் சுருட்டிய நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ipa
ips

By

Published : Oct 11, 2020, 1:02 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை, பெங்களூரை சேர்ந்த ஐபிஎஸ் அலுவலர் வேடத்தில் அணுகிய நபர், ரூபாய் 15 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்

கிடைத்த தகவலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட துணி சரக்குகளை மும்பை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்ற காரணத்தை கூறி தொழிலதிபரை போலி ஐபிஎஸ் அலுவலர் சர்மா அணுகியுள்ளார்.

பின்னர், அவரிடம் பேச தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய், விலையுயர்ந்த செல்போன், வாட்ச் ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, ஐபிஎஸ் அலுவலராக வந்தவர் போலி என்பதை சுதாரித்த தொழிலதிபர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details