தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லக்னோ மருத்துவமனையில் முலாயம் சிங் யாதவ் அனுமதி!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் வயிறு வலி காரணமாக, லக்னோ நகரத்தின் மேடாண்டா மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

Mulayam Singh Yadav
Mulayam Singh Yadav

By

Published : Aug 7, 2020, 7:52 PM IST

டெல்லி: உத்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லக்னோ நகரத்தின் மேடாண்டா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வயிறு கோளாறு, சிறுநீரக பிரச்னை அவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர சிகிச்சைப் பிரிவில் அவரின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details