தமிழ்நாடு

tamil nadu

சனாதன கொள்கைகளுடன் விளையாட வேண்டாம் - திக்விஜய் சிங் ட்வீட்

By

Published : Aug 4, 2020, 4:53 PM IST

டெல்லி: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சனாதன கொள்கைகளுடன் பிரதமர் விளையாடவேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

muhurat-for-ram-temple-ceremony-inauspicious-norms-of-sanatan-dharma-ignored-digvijaya-singh
muhurat-for-ram-temple-ceremony-inauspicious-norms-of-sanatan-dharma-ignored-digvijaya-singh

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3 முதல் 5ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கான பூஜைகள் நடைபெறவுள்ளன. இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர், கோயில் தொடர்புடைய பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ள நிலையில், நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், “ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் நரேந்திர மோடி ஒத்திவைக்க வேண்டும், ஏனெனில் இது தொற்றால் தீங்கு விளைவிக்கும் நேரமாகவுள்ளது.

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டிருந்தாலும், பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட வேண்டும். சனாதன தர்மத்தின் விதிமுறைகளை புறக்கணித்ததன் விளைவாகவே, கோயில் நிர்வாகிகள், பாஜக தலைவர்கள், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்து மக்களின் நம்பிக்கையாக ராமர் உள்ளார். ஆனால், பிரதமர் மோடி, பல ஆயிரம் ஆண்டு பழமையான சனாதன தர்மத்தின் கொள்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதால் அப்பாவி மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர்களுக்கும், பாஜக தலைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சரும், பிரதமர் மோடியும் ஏன் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை? உத்தரப் பிரதேசத்தின் முழு அமைச்சரவையும் தங்களை தனிமைப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை அயோத்தியில் வசிப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details