தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போபாலில் மீண்டும் ஓரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

போபால்: போபாலில் துர்கா பூஜையின்போது பாலக்கோடு, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லியத் தாக்குதல்) அரங்குகள் அமைத்து வீடியோ காட்சிகள் மூலமாக காண்பிக்கப்பட்டது.

Bhopal

By

Published : Oct 6, 2019, 5:30 PM IST

துர்கா பூஜை:நவராத்திரி காலங்களில் வடமாநிலங்களில் துர்கா பூஜைவெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜையுடன் பெண்கள் ஆடி, பாடி கொண்டாடுவார்கள். அந்த வகையில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் துர்கா பூஜையின் போது, இந்திய ராணுவத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்தியா மீது பயங்கரவாதிகள் பால்கோட் மற்றும் புல்வாமா ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பயங்கரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய தாக்குதல்) நடத்தப்பட்டது.

ராணுவத்துக்கு மரியாதை:இதனை நினைவுகூரும் வகையில், போபால் துர்கா பூஜையில் இந்த சர்ஜிக்கல் தாக்குதல்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர் கூறுகையில், பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் விமானப் படை தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்திய ராணுவத்தின் தியாகம் மற்றும் வீரம் கண்முன்னே தெரிவதாக துர்கா பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே:

15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த 'தூய்மை இந்தியா'! - அசத்திய விங் கமாண்டர்

ABOUT THE AUTHOR

...view details