தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கண்டித்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

கர்நாடகா: இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிய வேண்டாம் என்று கூறிய தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு சர்மா
மனு சர்மா

By

Published : Aug 2, 2020, 9:36 AM IST

கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி (43). இவர் தனது மகன் மனு சர்மாவை கரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆனால், தாய் கூறியதைக் கேட்காமல் தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் மகன் ஊர் சுற்றி உள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீ லட்சுமி, மகனை கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், செல்போனை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

தனது தாய் தொடர்ந்து கண்டித்து வந்ததால் ஆத்திரமடைந்த மனு சர்மா, தாயை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ லட்சுமி

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details