ஹிமாச்சல பிரதேசத்தில பிலாஸ்பூரில் சித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், "ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மோடி அதற்கு தொகை பெற்றாரா என்று அவரை கேட்கிறேன். நாட்டில் எந்த ஒரு பகுதியில் என்னுடன் விவதாத்தில் அவர் கலந்து கொள்ளலாம். நான் தோற்றுப் போனால் அரசியலிலிருந்து வெளியேறுகிறேன். கங்கை நதியின் மகனாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி, ரஃபேல் ஏஜென்டாக ஆட்சியிலிருந்து வெளியேறுவார். ராகுல் காந்தி ஒரு பீரங்கியை போன்றவர். நான் ஒரு ஏ.கே - 47 போன்றவன்" என்றார்.
'மோடியுடனான ரஃபேல் விவாதத்தில் தோற்றால் அரசியலில் இருந்து விலகத் தயார்..! - சித்து
பிலாஸ்பூர்: "ரஃபேல் விவகாரம் குறித்த மோடியுடனான விவாவத்தில் தோற்றால் அரசியலில் இருந்து விலகத் தயார்" என்று, முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.
சித்து உறுதி
நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்கப்பதிவு 59 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.