17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது திருப்பதி வந்துள்ளார். அவரை ரேணிகுன்டா விமான நிலையத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன், ஆளுநர் நரசிம்மன் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
திருப்பதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம்
அமராவதி: மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு பிறகு திருப்பதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, "ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகனுக்கு எனது வாழ்த்துக்கள். ஆந்திர மக்களுக்காக மத்திய அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்து வருகின்றனர். அதனால் தான் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது", என்று கூறினார்.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவருடன் மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் உடனிருந்தார்.