கோவிட் 19 வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நெருக்கடி சூழலை எதிர்கொள்வதற்காக சாா்க் கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்களும், பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளரும் கலந்துகொண்டனர். கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய கோவிட்-19 அவசரகால நிதி திரட்ட முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அவசரகால நிதிக்கான தொகையை தாமாக முன்வந்து அளித்துள்ளன.