மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் 'மோடி அலை' என்ற சொல்லை பயன்படுத்தியது போல், இம்முறை 'சௌகிதார்' (பாதுகாவலன்) என்ற சொல்லை பாஜக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. அந்தவகையில், ஊழல், அசுத்தம் ஆகியவைகளுக்கு எதிராக நான் ஒரு பாதுகாவலன் என்பதை மக்களிடம் பரப்ப வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
சௌகிதார்களிடம் உரையாற்றுகிறார் மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் இருக்கும் 25 லட்சம் வாட்ச்மேன்களிடம் காணொளி மூலம் இன்று உரையாற்றவிருக்கிறார்.
modi
மேலும், ட்விட்டர் பக்கத்திலும் தனது பெயருக்கு முன்னாள் 'சௌகிதார்' என்ற சொல்லை இணைத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாஜகவினரும் தங்களது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' என்ற சொல்லை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் இருக்கும் 25 லட்சம் வாட்ச்-மேன்களிடம் (சௌகிதார்) பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாற்றவிருக்கிறார். ஹோலி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் இன்று மாலை 4.30 மணிக்கு அவர் பேச இருக்கிறார்.